திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அங்காடித்தெரு பட நடிகைக்கு நேர்ந்த பரிதாப நிலை! உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ!
கடந்த 2010 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் அங்காடித்தெரு. இதில் மகேஷ், அஞ்சலி, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும் அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சிந்து. அவர் தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்த நிலையில் ஆபரேஷன் செய்து அதை நீக்கியுள்ளனர். ஆனால் அதன் தாக்கத்தால் ஸ்பைனல் கார்டு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பார்க்கச் சென்ற நடிகர் பிளாக் பாண்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சிந்து தனது நிலை குறித்து பேசியுள்ளார். மேலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கிறது. மருந்து, மாத்திரைகள் வாங்க அதிக பணம் தேவைப்படுகிறது. நான் இதிலிருந்து மீண்டு வந்தால் நிறைய பேருக்கு உதவி செய்வேன். தயவுசெய்து எனக்கு பண உதவி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்து கொரோனா காலத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு தேடிச்சென்று உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.