திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வலது புற மார்பகம் இல்லை.! அங்காடி பட பிரபலத்துக்கு இவ்வளவு கஷ்டங்களா.! வேதனையுடன் பகிர்ந்த நடிகை!!
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அங்காடித் தெரு. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிந்து. அதனை தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சிந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அப்பொழுது அவர் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் பல பிரபலங்கள் அவரது சிகிச்சைக்கு உதவினர். இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து அவர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, முதல்முறை புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருந்து பின் மீண்டு வந்தேன். கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தேன். ஆங்கில மருந்து செட் ஆகாததால் நாட்டு மருத்துவம் செய்து 50 சதவீதம் குணமடைந்தேன்.
கீமோ தெரபி செய்து எனது கை நரம்புகள் செயலிழக்க துவங்கியது. எனது வலதுபுற மார்பகம் புற்றுநோய் காரணமாக அகற்றப்பட்டதால், வலது கை வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் கூட இன்னும் ஆறவில்லை. கடந்த 2,3 வருஷமாகவே எனது நண்பர்கள் மற்றும் மக்களின் உதவியோடு சமாளித்து வருகிறேன். சமீபத்தில் கூட ஒரு சீரியலில் கமிட்டானேன். ஆனால் தற்போது சில உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது மற்றொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவியுள்ளது. என் வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என வேதனையுடன் கூறியுள்ளார்.