திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கடவுளே அங்காடித்தெரு படம் நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா.. அதிர்ச்சியில் திரையுலகம்.?
![Angadi theru hero interview](https://cdn.tamilspark.com/large/large_screenshot2023-05-23080331-59998.jpg)
கோலிவுட் திரை உலகில் 'அங்காடித்தெரு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மகேஷ் என்பவர். கதாநாயகியாக படத்தில் அஞ்சலி நடித்துள்ளார் . அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
'அங்காடித்தெரு' திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் இவருக்கு எதுவும் கை கொடுக்கவில்லை. இது போன்ற நிலையில்,சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் மகேஷ் தனது சினிமா வாழ்க்கை குறித்து கலக்கத்துடன் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த பேட்டியில் எனக்கு அங்காடி தெரு படத்திற்கு பிறகு 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை மறுத்து விட்டேன். இதன் பிறகு ஈட்டி, சுந்தரபாண்டியன் போன்ற வெற்றி படங்களில் வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டேன்.
எனக்கு திரைப்படங்களின் கதைகளை எப்படி தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று யாரும் ஆலோசனை கூறவில்லை. இதனாலே எனது சினிமா வாழ்க்கை தொலைந்து விட்டது என்று வருத்தத்துடன் பேசினார்.