மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீங்க.! நேர்கொண்ட பார்வை படத்திற்காக மிகவும் வருத்ததுடன் பிரபலம் விடுத்த வேண்டுகோள்!!
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தில் இருந்து பல காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும் படம் முழுவதும் லீக் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இதுகுறித்து பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "படம் எடுப்பது அதுவும் அதனை தியேட்டரில் ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். மேலும் பைரசியால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் பைரஸி சினிமாவை கொல்வதற்கு சமம். தயவு செய்து யாரும் நேர்கொண்ட பார்வை வீடியோகளை ஷேர் செய்யாதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
It is so difficult to make a film and especially releasing it in theatres! So many families are affected by piracy. Piracy is equal to killing cinema and those who are dependent on it!! Pls dont share videos of NKP #SayNoToPiracy #NerKondaPaarvai #nkp
— Anjana Rangan (@AnjanaVJ) 6 ஆகஸ்ட், 2019