ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வேட்டியை மடித்துக் கட்டி, செம கிக்காக குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி பாவனா! அதுவும் எந்த பாடலுக்கு பார்த்தீர்களா!! கிறங்கவைக்கும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலக்கட்டத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் பாவனா. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இருவரும் மிகவும் கலகலப்பாக அனைவரையும் கவரும் வகையில் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
மேலும் தன்னுடைய தனித்துவமான குரலாலும், நல்ல உச்சரிப்பு மிகுந்த பேச்சினாலும் பிரபலமடைந்த தொகுப்பாளினி பாவனா டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகு அவர் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது பிக்பாஸ் சம்யுக்தாவுடன் விதவிதமான காஸ்ட்யூமில் வித்தியாசமாக நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் பாவனா தற்போது வேட்டி கட்டி, சார்பட்டா பரம்பரை பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.