ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸில் அடிக்கடி பயன்படுத்தப்படும் அந்த வார்த்தை! குழந்தைகள் இதை கற்றுக் கொள்ளக்கூடாது! பாடம் எடுத்த தொகுப்பாளினி பாவனா!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
பொதுவாக பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையும் போட்டியாளர்களால் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும். அவ்வாறு இந்த சீசனிலும் அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தபோது கேமில் நல்ல மாற்றம் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் படுசூடாக நுழைந்த அவர் அதனை தொடர்ந்து ரியோ, நிஷா, சோம், கேப்ரில்லா என தனக்கென ஒரு குழுவை அமைத்து ராஜ்யம் நடத்துவது போன்று கருத்துக்கள் எழத் துவங்கியது. இந்நிலையில் ஆரி, அனிதா ஆகியோர் அவர்கள் குரூப்பிசம் செய்வதாகவும், பேவரிசம் காட்டி சில போட்டியாளர்களை காப்பாற்றி வருவதாகவும் அடிக்கடி குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தையான favourism (பேவரிசம்) என்பது சரியான வார்த்தை கிடையாது. அதனை அனைவரும் தவறாக கூறி வருகின்றனர் என தொகுப்பாளினி பாவனா கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், Favourism என்ற ஒரு வார்த்தையே கிடையாது. அது Favouri-ti-sm இதை ஏன் யாரும் தடுக்கவில்லை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் நம்முடைய குழந்தைகள் தவறான ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளகூடாது என தலையில் அடிப்பது போன்ற எமோஜி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.