ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இதனால்தான் அவரோட புகைப்படங்களை வெளியிடுவதில்லை! திருமண நாளில் பாவனா பகிர்ந்த சூப்பர் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களை கவர்ந்து பிரபலமாக இருப்பவர்கள் ஏராளம். அவ்வாறு சூப்பர் சிங்கர் மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா.
இவர் உச்சரிப்பு மிகுந்த பேச்சால், தனது தனித்துவம் வாய்ந்த குரலால் மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். மேலும் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார். மேலும் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
பாவனா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர்.அவர் அடிக்கடி தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். ஆனால் அவரது கணவரது புகைப்படங்களை எப்போதாவதுதான் வெளியிடுவார். இந்த நிலையில் பாவனா அண்மையில் தனது 10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், எனது பதிவுகளில் இவரை நீங்கள் எப்போதாவதுதான் பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணம் இவர் சமூக வலைதளங்கள் என்றாலே ஓடி விடுவார். நான் இவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.