கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
அடேங்கப்பா! நம்ம டிடிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? புதிய அவதாரத்தால் குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், நடவடிக்கைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து டிடி சமீபத்தில் பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்க உள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், ஆகாஷ் பூரி நடிக்கும் ரொமான்டிக் படத்தில் டிடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இதில் சார்மி கவுர் கதாநாயகியாக நடிக்கிறார்.. இந்நிலையில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவுற்றது.
Love u DD ... nuvvu bangarum 😘 can’t wait to show people ur super energetic role in #romantic 😘 https://t.co/QNpvBZ3wHo
— Charmme Kaur (@Charmmeofficial) 24 March 2019
இந்நிலையில் பட அனுபவம் குறித்தும், நன்றி தெரிவித்தும் டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு நடிகை சார்மி, டிடி உங்களது சூப்பர் எனர்ஜெடிக் கதாபாத்திரத்தை பார்க்க மக்கள் இனியும் காத்திருக்கமுடியாது என தெரிவித்துள்ளார்.