மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இது புடவைதானா! வித்தியாசமான ஸ்டைலில் கிறங்கடித்த தொகுப்பாளினி பாவனா! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக இருக்கும் பலருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருந்தவர் பாவனா. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், தன்னுடைய தனித்துவமான குரலாலும், உச்சரிப்பு மிகுந்த பேச்சினாலும் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகு அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கருப்பு நிற புடவையை வித்தியாசமான ஸ்டைலில் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது.