மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யார் மேலேயும் நம்பிக்கை வரலை! அதனால்தான்.. கண்கலங்கிய தொகுப்பாளினி மகேஸ்வரி!! ஏன்னு பார்த்தீங்களா!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பெருமளவில் பிரபலமானவர் மகேஸ்வரி. அதனைத் தொடர்ந்து இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய அவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையில் தனது வேலைக்கு இடைவெளி விட்டிருந்தார்.
பின்னர் மீண்டும் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயுமானவன், புதுக்கவிதைகள் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் சினிமாவிலும் குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்தார். மகேஸ்வரி தற்போது விக்ரம், மகான், சாணிக் காயிதம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விவாகரத்து பெற்று தனது குழந்தையுடன் மகேஸ்வரி அண்மையில் பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அவர், எனது முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்றது. அதன் பிறகு நான் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. என்னை நன்றாக புரிந்து கொண்டு, எனது பையனையும் ஏத்துகொள்கிற மாதிரியான துணையை என்னால தேர்ந்தெடுக்க முடியவில்லை.
யார் மேலேயும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. எனது பையன், என் அம்மா, என் வேலை இதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறேன் என கூறியுள்ளார். கணவர் இல்லாமல் தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.