மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. தொகுப்பாளினி மகேஸ்வரிக்கு இந்த வயசுல மகன் இருக்காரா! விழிபிதுங்கிய ரசிகர்கள்!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மகேஸ்வரி. அதனைத் தொடர்ந்து இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய அவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையில் தனது வேலைக்கு சிறு இடைவெளி விட்டிருந்தார்.
பின்னர் மீண்டும் களமிறங்கிய அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயுமானவன் மற்றும் புதுக்கவிதைகள் ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் சினிமாவிலும் தலைகாட்டிய அவர் குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியானார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் மகேஸ்வரி அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை அதிர வைப்பார். இந்நிலையில் அவர் அண்மையில் 10வது பிறந்த நாளை கொண்டாடிய தனது மகனுக்கு வாழ்த்து கூறி அவனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் அதனைக் கண்ட ரசிகர்கள் என்னது மகேஸ்வரிக்கு 10 வயதில் மகன் இருக்காரா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.