திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தும் உதறித் தள்ளிய தொகுப்பாளினி ரம்யா!! அதற்கு அவர் கூறிய காரணத்தை பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் பாவனா, ரம்யா, டிடி, ஜாக்குலின், பிரியங்கா என ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த ஏராளமான தொகுப்பாளினிகள் உள்ளனர். இவ்வாறு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.
இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள், சினிமா கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். அதனை தொடர்ந்து அவர் 2007ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மொழி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, ஆடை போன்ற பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதனைத் தொடந்து ரம்யா தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அப்பொழுது ரசிகர் ஒருவர், நீங்கள் எப்போதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளீர்களா என கேட்டுள்ளார். அதற்கு ரம்யா ஆம், ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் எனது உள்ளுணர்வையும், எனது மனது சொல்வதையும் கேட்பேன. அதனால் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.