திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேற லெவல் கலெக்ஷன்.! 16 நாளில் மட்டும் இத்தனை கோடியா!! வசூலை அள்ளும் அனிமல்!
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமான இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் அனிமல். இத்திரைப்படத்தில் ரன்வீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் முன்னணி ரோலில் நடித்துள்ளனர்.
அனிமல் திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ஹிந்தி,தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்பட்டது. தனது தந்தையை கொல்ல நினைக்கும் கும்பலை அழிப்பதற்காக மகன் கேங்ஸ்டராக மாறி என்ன செய்கிறான்? என்பதை அடிப்படையாகக் கொண்ட இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனாலும் வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது.
முதல் நாளில் ரூ.116 கோடியை வசூல் செய்த இந்த படம் நாளுக்கு நாள் வசூலை அள்ளி 10வது நாளில் ரூ.717.46 கோடி வசூல் செய்தது. தற்போது 16வது நாளில் ரூ. 817.36 கோடி வசூலை ஈட்டியுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
#Animal remains invictus at the Box Office🪓🔥
— Animal The Film (@AnimalTheFilm) December 17, 2023
Book your Tickets 🎟️https://t.co/kAvgndK34I#AnimalInCinemasNow #Animal #AnimalHuntBegins #BloodyBlockbusterAnimal #AnimalTheFilm @AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor @iamRashmika @thedeol @tripti_dimri23@imvangasandeep… https://t.co/Pa5unxpQtz pic.twitter.com/Pn4S9G8Roe