மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலிவுட் சினிமாவை குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர்.. கடுப்பான ரன்பீர் கபூர்.!
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "அனிமல்". வரும் டிசம்பர் 1ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் தனது "பிரம்மாஸ்த்திரம்" படத்தை இயக்குனர் ராஜமௌலியை வைத்து பிரமோஷன் செய்த ரன்பீர் கபூர், அனிமல் படத்தையும் அவரை வைத்தே பிரமோஷன் செய்து, தெலுங்கிலும் நல்ல வசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக ஹைதராபாதில் பிரமோஷனை நடத்தினார்.
இவ்விழாவில் ராஜமௌலி, மகேஷ் பாபு மற்றும் தெலுங்கானா அமைச்சர் சமக்குரா மல்லா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பலரும் அனிமல் படத்தைப் பாராட்டி வந்த நிலையில் அங்கு பேசிய அமைச்சர், "பாலிவுட் எல்லாம் எப்போதோ காலியாகி விட்டது.
ரன்பீர் கபூர் ஹைதராபாத் வந்து செட்டிலாகி விடலாம். இந்தியாவிலேயே டோலிவுட் தான் நம்பர் ஒன் சினிமா இண்டஸ்ட்ரி" என்று பேசி ரன்பீர் கபூரை சங்கடத்தில் நெளிய வைத்துள்ளார். இதையடுத்து பாலிவுட் ரசிகர்கள் இனிமேல் தென்னிந்திய படங்களை நாம் ஆதரிக்கக் கூடாது என்று கொந்தளித்து வருகின்றனர்.