பிரபல திரைப்பட பாடலின் காப்பி தான் ஜெயிலர் படத்தின் கவாலா பாடலா.. வைரலாகும் வீடியோ.!



anirudh-copied-jeyilor-movie-song

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சினிமா துறையில் சந்தித்து வந்தாலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தற்போது சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்து பெற்று இருக்கிறார்.

Jeiler

மேலும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த திரைப்படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஜெய்லர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன்படி கவாலா பாடல் வெளியாகி இருக்கிறது.

Jeiler

இதன்படி அனிருத் இசையமைப்பில் வெளியான கவாலா பாடல் பிரபல நடிகரான எம்ஜிஆரின் திரைப்பட பாடலில் இருந்து காப்பி செய்யப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனிருத்தை கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.