மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சங்கர் படத்தில் அனிருத்துக்கு வந்த சோதனை!
இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் சிறுவயதில் திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதிலும் அந்த படத்தில் இடம் பெற்ற வொய் திஸ் கொலவெறி டி என்ற ஒற்றைப் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
அதனை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவரின் பாடல்கள் அனைத்தும் சிறுவயது முதல் பெரிய வயது வரை உள்ள அனைத்து மக்களும் பிடிக்கும்.
இதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 படமானது ஒரு சில காரணங்களால் இடையிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது அனிருத் அவர்கள் சில பாடல்களை இசையமைத்திருந்தார். ஆனால் சில நாட்களிலேயே இந்தியன் 2 படப்பிடிப்பானது நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. எனவே தற்போது இயக்குனர் சங்கர் அவர்கள் அனிருத்திடம் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாடல்கள் இப்ப உள்ள ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் இல்லை. எனவே மீண்டும் புதிய பாடல்களை கம்போஸ் செய்ய கூறியுள்ளாராம். இதனால் தற்போது அதிக வேலையை இயக்குனர் கொடுத்துள்ளார்.