#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஷால் திருமணம் நடக்குமா? நடக்காதா? விஷாலின் காதலி அனிஷா செய்த காரியத்தால் மீண்டும் குழம்பிபோன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் 16 ந் தேதி விஷால் மற்றும் அனிஷாவிற்கு ஹைதராபாத்தில் படுகோலகாலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சமீபகாலமாக அனிஷா மற்றும் விஷால் திருமணம் நின்றுவிட்டதாக தகவல் பரவி வந்தது.
மேலும், அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விஷால் மற்றும் அவருக்கு சம்மந்தமான அனைத்து புகைப்படங்களையும் நீக்கிஇருந்தார். ஆனால், இந்த தகவல் பரவி வரும் நிலையில் இருதரப்பினரும் இதுகுறித்த எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.இதனால் விஷால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று விஷால் தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அனிஷா தனது சமூகவலைத்தள பக்கத்தில் இனிய பிறந்தநாள் ஸ்டார், நீங்கள் பிரகாசிக்க பிறந்தவர். என பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் மீண்டும் திருமணம் நடக்குமா நடக்காதா என குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.