மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆக்ஷன் ஹீரோயினாக கெத்துகாட்டும் அஞ்சலி.! ஓடிடியில் ரிலீஸ்.! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. அவர் தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகும் படத்திலும், தமிழில் நிவின் பாலிக்கு ஜோடியாக, ராம் இயக்கத்தில் உருவாகும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் இயக்குனர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு வெப்தொடர் ஜான்சி. இதில் அஞ்சலி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளாராம். நடிகர் கிருஷ்ணா தனது ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் இதனை தயாரித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் அஞ்சலி ஆக்சன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தனது பழைய ஞாபகங்களை இழந்த அஞ்சலியை சிலர் துரத்துகின்றனர். அவர்கள் எதற்காக அவரை துரத்துகின்றனர். அது அஞ்சலியை எப்படி பாதிக்கிறது? என்பது படத்தின் கதை என கூறப்படுகிறது. ஓடிடியில் வெளிவரும் ஜான்சி திரைப்படம் பின்னர் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.