மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடா.. கடைசியில இப்படி இறங்கிட்டாரே! சமந்தா வழியில் அஞ்சலி செய்த காரியம்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் அங்காடித்தெரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அவர் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, கருங்காலி தரமணி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும், அசத்தலாக நடிக்கக்கூடிய அஞ்சலி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் கவர்ச்சிக்கு தாவியுள்ளார். அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை அஞ்சலி தெலுங்கு படமொன்றில் ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார். அதாவது தெலுங்கில் நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் ‘மச்சேர்லா நியோஜகவர்கம்' என்கிற படத்தில் அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இதற்கான போஸ்டர் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் கடைசியில் அஞ்சலி இப்படி இறங்கிட்டாரே என ஷாக்காகியுள்ளனர். டாப் நடிகையான சமந்தாவும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ.. சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார்.