மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்காவுக்கு பறந்த பிரபல நடிகை அஞ்சலி.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் அஞ்சலி 'கற்றது தமிழ்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அஞ்சலியை குறித்து தொடர்ந்து பல கிசுகிசு பேசப்பட்டு வந்த நிலையில், இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. மேலும் அஞ்சலியும் ஜெய்யும் காதலிப்பதாகவும், பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நின்று விட்டதாகவும் வதந்தி நிலவி வருகிறது.
இது போன்ற நிலையில், தற்போது அமெரிக்காவிற்கு பறந்து சென்ற அஞ்சலி அங்கிருந்து பல்வேறு புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.