மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்.! வெளிப்படையாக கூறிய நடிகை அஞ்சலி.!
தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனையடுத்து அவர் அங்காடித்தெரு படத்தில் ஹீரோயினாக தனது அசத்தலான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்து பெருமளவில் பிரபலமானார். இதனையடுத்து அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, தரமணி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தனக்கு நண்பராக அறிமுகமான ஜெய்யுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது. இதனால் சினிமாவில் கவனம் செலுத்தாமல், நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது.
இந்தநிலையில் சமீபத்தில் அவர் அளித்த பெட்டியில், ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் யார் என்பதை அஞ்சலி கூற மறுத்துவிட்டார்.