மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. தங்கம் போல மின்னுறியேமா! அழகிய உடையில் அசரடிக்கும் விஜே அஞ்சனா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!!
சன் மியூசிக் சேனலில் பணியாற்றி ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே அஞ்சனா. அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் அதுமட்டுமின்றி அவர் விருது வழங்கும் விழாக்கள், ஆடியோ ரிலீஸ் விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
அஞ்சனா கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நன்கு வளர்ந்த ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் சில ஆண்டுகள் தொகுப்பாளர் பணியில் இருந்து விலகி இருந்த அஞ்சனா மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி சில பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான கிளாமர் போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஷைனிங் சில்க் உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.