#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனாவால் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போன அண்ணாத்த ரிலீஸ்! சன்பிக்சர்ஸ் அப்டேட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் மாஸான திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்ப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக படப்படிப்பு தற்போது தடைப்பட்டுள்ளது.
அக்டோபருக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பு தான் அடுத்தகட்ட படபிடிப்பு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அண்ணாத்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#AnnaatthePongal2021#அண்ணாத்தபொங்கல்2021@rajinikanth @directorsiva @immancomposer @KeerthyOfficial @prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/PY5qldztmC
— Sun Pictures (@sunpictures) May 12, 2020