மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேஸ்புக் கணக்கை ஹேக்செய்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட மர்மநபர்! கடுப்பான தனுஷ் படநடிகை!
பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் அவர் தமிழ்ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அனுபமா கன்னடம், தெலுங்கு என தொடர்ந்து பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார். மேலும் அவர் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அனுபமா பரதநாட்டிய டான்ஸராக நடித்துள்ளார். கொரோனோ பிரச்சனையின் காரணமாக இப்படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் சமீபத்தில் அவரது ஃபேஸ்புக் கணக்கு திடீரென மர்மநபரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் ஹேக்கர்ஸ் வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட அனுபமா பரமேஸ்வரன் மிகவும் ஆவேசமாக அந்த புகைப்படத்தை வெளியிட்டு இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம். இந்த முட்டாள்தனமான வேலைகளை நேரம் ஒதுக்கிசெய்கிறீர்கள் என கோபமாக கேட்டுள்ளார்.