மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? ரகசியத்தை போட்டுடைத்த கொடி நாயகி!!
பொதுவாகவே சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நபர்களாக பழகினாலும் அவர்கள் காதலிப்பதாக வதந்திகள் பரவுவது வழக்கம்.
இந்நிலையில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இவ்வாறு மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அனுபமாவும்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் காதலிப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
அதாவது அனுபமா மற்றும் பும்ரா இருவரும் சமூக வலைத்தள பக்கத்தில் ஒருவரின் பதிவிற்கு மற்றவர்கள் கருத்து பதிவிட்டு வந்தனர்.மேலும் பும்ரா நடிகைகளில் அனுபமாவை மட்டுமே பின்தொடர்ந்துள்ளார்.இதனாலேயே வதந்திகள் பரவ துவங்கியது.
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அனுபமா, நானும், பும்ராவும் நல்ல நண்பர்களே. நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. நாங்கள் காதலிப்பதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளார்.