மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் உண்மையா காதலிச்சேன் ஆனா.. முதன்முறையாக போட்டுடைத்த இளம் நடிகை!
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் மூன்று நடிகைகளுள் ஒருவராக, மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் அதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் அவர் தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை அனுபமா இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தது. ஆனால் அதனை இருவருமே மறுத்து விட்டனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அனுபமா அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், நிஜவாழ்க்கையில் காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆம், நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன். ஆனால் அது முறிந்துவிட்டது. நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை என்று கூறியுள்ளார்.