திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அங்கும் தேவசேனா ஆட்சி தான்.! சந்தோஷத்தில் ரசிகர்கள்..வெளியான தகவல்.?
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. 2005ம் ஆண்டு நாகார்ஜுனாவுடன் "சூப்பர்" என்ற தெலுங்குப் படத்தில் தான் அனுஷ்கா முதன் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து 2006ம் ஆண்டு "ரெண்டு" என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார்.
ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமே அறியப்பட்ட அனுஷ்காவுக்கு திருப்புமுனையாக அமைந்தது "அருந்ததி" திரைப்படம் தான். அப்படத்தில் நல்ல நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அனுஷ்கா, தொடர்ந்து நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார்.
பிரபாஸுடன் இவர் நடித்த பாகுபலி இரண்டு பாகங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதன் பிறகு தமிழில் ஆர்யாவுடன் இவர் நடித்த "இஞ்சி இடுப்பழகி" படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா, அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல், படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.
தற்போது இரண்டாவது இன்னிங்ஸை "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி" படம் மூலம் தொடங்கியுள்ள அனுஷ்கா, தற்போது மலையாளத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அங்கும் அனுஷ்கா ஆட்சி தான் என்று மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.