"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
"ரொம்ப மிஸ் பண்றன்., அவரு கூட இருக்கும்போது எல்லாமே அழகா இருக்கும்" - விராட் கோலிக்காக உருகிய அனுஷ்கா..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷர்மா. இவர் கடந்த 2006-ல் ஷாருக்கான் நடிப்பில் வெளியான "ரப் நே பனா தி ஜோடி" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பரி, சஞ்சு, ஜீரோ ஆகிய படங்களிலும் அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். குழந்தை பிறந்த பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அனுஷ்கா சர்மாவின் சகோதரர் கர்னேஷ் ஷர்மா தயாரிக்கும் "சக்ரா எக்ஸ்பிரஸ்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ள அனுஷ்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அதில், தனது கணவர் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து, "கோலியுடன் இருக்கும்பொழுது உலகம் பிரகாசமாகவும், வேடிக்கையாகவும், உற்சாகமாகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக மிக அழகாக தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களால் டிரெண்ட்டாகி வருகிறது.