திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறுபடியுமா?.. அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் அனுஷ்கா..! புதிய படம் அந்தமாதிரி கதாப்பாத்திரமா?.!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் அனுஷ்கா. இவர் அருந்ததி, பாகமதி, பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி போன்ற படங்களில் தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களின் மனதை பறித்தார்.
தமிழில் இவர் நடித்த பல படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி, அதனை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், பாகுபலி 2 படத்திற்கு பின் சில காலம் நடிப்பதையே தவிர்த்தார்.
இவர் தமிழில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமும் நடிக்க தயாராக இருந்த நிலையில், தெலுங்கு இயக்குனர் ஒருவர் சொன்ன கதை பிடித்து அந்த கதாபாத்திரத்திற்காக மீண்டும் தனது உடல் எடையை அதிகரிக்க சம்மதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்பே இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்து, பின் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவரை கைவிட்டுப் போன நிலையில், மீண்டும் உடல் எடையை அதிகரிப்பதற்கு சம்மதம் தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.