முதல் முறையாக விஜய்யின் குரலை பற்றி வாய் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்! 'வெறித்தனம்' எப்படி?



ar-rahman-about-vijay-voice-on-verithanam-song

அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிகில்’. விஜய் நடித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தில் இடம் பெறும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பெண்களை போற்றும் விதத்தில் உருவான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 

Bigil

மேலும் இந்த படத்தில் 'வெறித்தனம்' என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். ஏற்கனவே பல படங்களில் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 'வெறித்தனம்' பாடலை குறித்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், "வெறித்தனம் பாடலை விஜய் மிக அருமையாக பாடியுள்ளார். அவரது குரலில் இந்த பாடல் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் இன்னும் வேலைகள் நடைபெற்று வருவதால் என்னால் இதற்கு மேல் எதையும் கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.