கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
என்னது.. தமிழ் வராதா?? நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு ஏ.ஆர் ரகுமான் கொடுத்த நச் பதில்.! சூப்பரா சொல்லிட்டாரே!!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர். மேலும் இந்தி திணிப்புக்கு பதிலாக அவ்வபோது குரல் கொடுத்தும் வருகிறார். இந்த நிலையில் அண்மையில் ஏ.ஆர் ரகுமான் விருது விழா ஒன்றில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
அப்பொழுது தொகுப்பாளர்கள் ஏ.ஆர் ரகுமானின் மனைவியை பேச அழைத்தனர். அவர் பேச துவங்கிய போது, இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் மனைவிக்கு அன்பு கட்டளை விடுத்தார். அதற்கு அவர் எனக்கு தமிழ் சரளமாக பேச வராது. அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன் மன்னித்து விடுங்கள் என கூறினார். இந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலானது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டுல குடும்பத்தில் என்ன பேசுவாங்க? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஏ.ஆர் ரகுமான் நச்சென பதிலடி கொடுக்கும் வகையில் "காதலுக்கு மரியாதை" என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
காதலுக்கு மரியாதை🌺😍 https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023