#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"புள்ளையும், புருசனும் வேணாம்.." ஃபேஸ்புக் லவ்வர் வேணும்.!! அடம்பிடித்த இளம்பெண்.!! அட்வைஸ் செய்த போலீஸ்.!!
கோயம்புத்தூர் அருகே ஃபேஸ்புக் காதலனுக்காக, கணவன் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு இளம் பெண் ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணிற்கு அறிவுரை கூறிய காவல் துறையினர் அந்தப் பெண்ணை கணவனுடன் சேர்த்து வைத்தனர்.
ஃபேஸ்புக் காதல்
கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள கருத்தம்பட்டியை சேர்ந்தவர் நந்த கணேஷ். 28 வயதான இவர் ஆன்லைன் திருமண தகவல் நிலையங்களின் மூலம் தனக்கு பெண் தேடி இருக்கிறார். இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான இளம் பெண் ஒருவரை நந்த கனேஷ் காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காதல் ஜோடி ஃபேஸ்புக் மற்றும் செல்போன் தொடர்பு மூலம் தங்களது காதலை பலப்படுத்தி இருக்கிறது.
திடீர் திருமணம்
இந்நிலையில் கடந்த நவம்பர் 13ஆம் தேதியன்று நந்த கனேஷ் வீட்டிற்கு வந்த இளம் பெண், தான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்து செய்து கொள்ளுமாறு நந்த கணேஷிடம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நந்த கணேஷின் உறவினர்கள் தலைமையில் மறுநாள் திருமணம் நடைபெற்றது.
இதையும் படிங்க: "குடி குடியை கெடுக்கும்.." போதையால் சீரழிந்த குடும்பம்.!! புதுமண தம்பதி தற்கொலை.!!
அறிவுரை கூறிய காவல்துறை
இதனைத் தொடர்ந்து திடீரென ஒரு நாள் நந்த கணேஷ் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அவர் திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணிற்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இளம் பெண்ணிடம், கணவன் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து தனது கணவன் மற்றும் குழந்தையுடன் வாழ இளம் பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இளம் பெண் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஏமாற்றமடைந்த நந்த கணேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றது சோகமாக இருந்தது.
இதையும் படிங்க: "இனி குடிச்சிட்டு வருவ.." போதையில் உறங்கிய கணவனுக்கு கொதிக்கும் எண்ணெயில் அபிஷேகம்.!! மனைவி கைது.!!