திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா.? மொத்த சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் முதன் முதலில் தமிழில் 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைத்து பல ஹிட் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
தற்போது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பலமொழிகளிலும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார் ஏ ஆர் ரகுமான்.
எளிமையான மனிதராக இருந்து வரும் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் இசையமைக்க ஆரம்பித்து 30 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த 30 வருடங்களில் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் ஏ ஆர் ரகுமானின் சொத்து மதிப்பு குறித்து செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, 600 கோடி சொத்திற்கு சொந்தக்காரரான ஏ ஆர் ரகுமானிற்கு மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்தமாக வீடு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் புதிதாக வீடு வாங்கி இருக்கும் ஏ ஆர் ரகுமான் துபாயில் இசைக்கூடம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இவ்வாறு பல கோடிக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார் ஏ ஆர் ரகுமான்.