திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"இந்தக் குழந்தை யார் என்று தெரிகிறதா?! உலகம் போற்றும் மிகப்பெரிய இசைப் பிரபலம் இவர்!"
தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிப் படங்களுக்கு இசையமைத்து உலகளவில் பிரபலமானவர் ஏ. ஆர். ரஹ்மான். இவர் மணிரத்னத்தின் "ரோஜா" படத்தில் இசையமைப்பாளராக 1992ம் ஆண்டு அறிமுகமானார். இசைப்புயல் என்று அழைக்கப்படும் ரஹ்மான், ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்.
மேலும் இவர் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதினை வென்றுள்ளார். மேலும் கோல்டன் க்ளோப் விருது, தேசிய திரைப்பட விருது, பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான்.
திலீப் குமார் என்ற தன் பெயரை இஸ்லாம் மதத்தை தழுவி ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார். சிறு வயதிலேயே மிகப்பெரிய புகழை அடைந்து, புகழின் உச்சியில் இருக்கும் இவரின் தந்தையும் ஒரு இசையமைப்பாளராக இருந்து மறைந்தவர்.
அமைதியான சுபாவத்தைக் கொண்ட இவருக்கு, உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்று வரை தனது அசாத்திய திறமையால் புகழின் உச்சியில் இருக்கும் ரஹ்மானின் இசைக்கன்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில் திரை திரையில் மட்டுமல்லாத சமூக வலைத்தளங்களிலும் பிஸியான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இதனையடுத்து இவரின் சிறு வயதுப் புகைப்படங்கள் சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.