மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல் ரேஸில் இருந்து விலகிய அரண்மனை 4 திரைப்படம்.. காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் நகைச்சுவை பேய் படங்களின் வரிசையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அரண்மனை. இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த அனைத்து திரைப்படங்களையும் இயக்குனர் சுந்தர் சி தான் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், சிங்கம் புலி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது பொங்கலுக்கு அதிக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் ரிலீஸை தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.