#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் புகழ் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை!
தமிழில் என்னமோ ஏதோ, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட பல படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஆரவிற்கு ஜோடியாக `மார்க்கெட் ராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் ஆரவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி உள்ளது என இயக்குனர் கூறுகையில் முதலில் நடிக்க மறுத்தார் நிகிஷா பட்டேல்.பின்னர் இயக்குனர் முழுக்கதையையும் நிகிஷா பட்டேலிடம் கூறிய பிறகு அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இதைப்பற்றி நிகிஷா பட்டேலிடம் கேட்டபோது இந்த காட்சி படத்தில் மிகவும் முக்கியமான காட்சி என்பதால் முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.