திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தயவுசெய்து நிறுத்துங்க., எங்கள வாழவிடுங்க - ரசிகர்களால் கதறிய தொகுப்பாளினி அர்ச்சனா..! இதுதான் காரணமாம்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6-வது சீசனில் அடி எடுத்து வைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
நடப்பு ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஆயிஷா, மைனா நந்தினி, நடன இயக்குனர் ராபர்ட், இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி உட்பட பலரும் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதால், பலரும் தங்களின் டாஸ்க் வேலை செய்ய தொடங்கியுள்ளனர்.
பிக்பாஸ் தொடங்கிய நாட்களில் இருந்து தனலட்சுமி விவாதம் செய்வதுபோன்ற பல ப்ரோமோக்கள் வெளியாகின்றன. சிலர் தனலட்சுமி, இந்த சீசன் ஜூலியா? வனிதாவா? அர்ச்சனாவா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இதனைக் கண்டு சோகமான அர்ச்சனா, "எங்களை வாழ விடுங்கள்.
உங்களது கருத்துக்கள் மற்றும் பதிவை நிறுத்துங்கள். உங்களின் பதிவுகளால் பலரும் வாழ்க்கையை தொலைத்துள்ளனர்" என்று கூறவே, அதனை கண்ட ரசிகர்கள், "நீங்கள் அதனை கண்டுகொள்ள வேண்டாம்" என்று அர்ச்சனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.