மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளுடன் வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் ஆர்யா - சாயிஷா... வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் பிரபல நடிகையான சாயிஷா என்பவரை காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் நிறைய இருந்தாலும் இருமணமும் ஒத்து போனதால் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகியும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த தம்பதியினர் சமீபத்தில் நிறைவடைந்த ஆர்யாவின் பிறந்தநாள் அன்றும் தான் முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார் சாயிஷா.
இந்நிலையில் தற்போது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்று செம ஜாலியாக இருந்துள்ளனர். அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோகளை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.