மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதிக்கு போட்டியாக களமிறங்கிய ஆக்சன் கிங்... வெளியான புதிய தகவல்.! ரசிகர்கள் ஆர்வம்!
தமிழ் சினிமாவில் 'ஆக்சன் கிங்' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். கதாநாயகனாக நடித்து வந்த இவர் சமீப காலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மங்காத்தா மற்றும் இரும்புத் திரை போன்ற திரைப்படங்களில் இவர் நடித்த எதிர்மறை கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்புகளில் நடிகர் அர்ஜுன் கலந்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி படப் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து வெளியாகி இருக்கிறது.
நடிகர் அர்ஜுனுக்கு செயற்கையாக மேக்கப் போட்டு போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தினம் தினம் லியோ படத்தில் இருந்து வரும் அப்டேட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயரச் செய்து கொண்டே இருக்கிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.