திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பொது இடத்தில் கண் கலங்கிய பிரபல நடிகர் அருண் பாண்டியன் மகள்- நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் 90களில் மிகப்பிரபலமாக இருந்த நடிகர் அருண்பாண்டியன். இவர் தற்போது தமிழ் படங்களை வெளிநாட்டில் விநியோகம் செய்து வருகின்றார்.
தற்போது அவருடைய மகள் கீர்த்தி பாண்டிய சினிமா துறையில் கால்ப்பதித்துள்ளார்.
கனா பட ஹீரோ தர்ஷன் நாயகனாக நடித்துள்ள அடுத்த படம் தும்பா. இந்த படத்தில் நாயகியாக நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் அறிமுகமாகிறார். ஹரிஷ்ராம் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதையில் உருவாகியிருக்கிறது.
இந்தபடத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை கீர்த்தி பாண்டியன் பேசும்போது, நான் நடிக்க வந்தபோது சில கதைகளை வேண்டாம் என்று தவிர்த்துள்ளேன். அதோடு என்னையும் சில டைரக்டர்கள் நிராகரித்துள்ளார்கள். எனது ஒல்லியான தோற்றம் மற்றும் கலரை வைத்து தான் என்னை நிராகரித்தார்கள்.
இருப்பினும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்தான் இயக்குநர் ஹரிஷ்ராம் என்று சொல்லும்போதே கண்கலங்கிய கீர்த்தி பாண்டியன், சிறிது நேரம் பேச முடியாமல் தடுமாறிப்போய் நின்றார்.
அதன்பிறகு படக்குழுவினர் தேற்றி அவரை பேச வைத்தபோது, இந்த படத்திற்காக நான் ஷாட்ஸ் அணிந்தபோது அது எனக்கு செட்டாகவில்லை. ஆனால் டைரக்டர் எனக்கு மன தைரியம் கொடுத்து என்னை நடிக்க வைத்தார். என் மீது நம்பிக்கை வைத்த அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று உணர்வுப்பூர்வமாக பேசினார்.