மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வில்லன் நடிகர் அருண்பாண்டியனின் மகள் இந்த நடிகையா? முதல் படத்திலேயே அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா!
xதமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அருண்பாண்டியன். பெரும்பாலும் இவர் வில்லன் நடிகராகவே நடித்துள்ளார்.மேலும் அப்பொழுது அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அது மட்டுமின்றி அருண்பாண்டியன் சில படங்களையும் இயக்கியுள்ளார்
நடிகர் அருண்பாண்டியனின் மூன்றாவது மகள் கீர்த்தி பாண்டியன். எலக்ட்ரானிக் மீடியா படித்து முடித்துவிட்டு மாடலிங் துறையில் இருந்த அவர், தனது தந்தையின் தொழில்களுக்கும் உதவியாக இருந்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளிவந்த தும்பா திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். இப்படம் விலங்குகளை பாதுகாப்பது மற்றும் காடுகளை பாதுகாப்பது போன்றவற்றை மையமாகக் கொண்டது. மேலும் இத்திரைப்படம் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் பெருமளவில் கவர்ந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தும்பா படத்தில் நடித்ததற்காக கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் முதல் படத்திலேயே விருதை பெற்ற கீர்த்தி பாண்டியனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.