திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் அருண்விஜய்யா இது! சிறுவயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள் !
தமிழ் சினிமாவில் முறைமாப்பிளை என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கி ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் விஜய். இவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார்.
அவர் பல வருடங்கள் எக்கச்சக்கமான படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். மேலும் அருண் விஜய் புதுமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் பாக்ஸர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது சிறுவயது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.