#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
12 பெண்களை எங்க வீட்டு மாப்பிள்ளையில் மிஸ் பண்ண ஆர்யாவுக்கு காதல் திருமணமாம்!.
பிரபல நடிகர் ஆர்யா இளம் நடிகையுடன் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் பெண்களுக்கு அதிகம் பிடித்த நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்ப்பதற்காகவே பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்கள்.
எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்யாவை திருமணம் செய்துக் கொள்ள 12 பெண்கள் ஆர்வம் காட்டி போட்டியிட்டனர். அதில் இலங்கை மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 பெண்களை இறுதியாக தேர்ந்தெடுத்தார்.
அவர்களில் ஆர்யா யாரை திருமணம் செய்துக் கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அதில் கலந்துகொண்ட பெண்களும், ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர் அவருக்கு அந்த நிகழ்ச்சி மூலமும் திருமணம் நடக்கவில்லை என்று.
இந்நிலையில், மீண்டும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கிய நடிகர் ஆர்யா, ‘கஜினிகாந்த்’ என்ற படத்தில் நடித்தார். அதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த சாயீஷாவும், ஆர்யாவும் காதலித்து வருவதாக தகவல்கள வெளியாகி வருகின்றன.
நடிகர் சூர்யா நடித்து வரும் ‘காப்பான்’ திரைப்படத்திலும் சாயீஷாவும், ஆர்யாவும் சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்தமுறையாவது ஆர்யா திருமணம் செய்துக் கொளவாரா அல்லது இது வெறும் வதந்தியா என்பதை அவர்கள் தரப்பில் இருந்து குறிப்பிடவில்லை.