"திருமணத்திற்கு பிறகு வந்த முதல் பிறந்தநாள்" மனைவியின் பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த அசோக் செல்வன்..



Ashok selvan birthday post by keerthi pandian

2013ம் ஆண்டு வில்லா 2 படத்தில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தொடர்ந்து இவர் சூது கவ்வும், பீட்ஸா 2: வில்லா, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம், சம்டைம்ஸ், ஓ மை கடவுளே, நிஜமெல்லாம் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

actor

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள அசோக் செல்வன், சமீபத்தில் நடித்த "போர்த்தொழில்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து "ப்ளூ ஸ்டார்" என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் அசோக் செல்வன்.

நடிகர் அருண்பாண்டியனின் மூன்றாவது மகள் தான் இந்த கீர்த்தி பாண்டியன். இந்நிலையில், இன்று அசோக் செல்வனுக்கு 35ஆவது பிறந்தநாள். திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், கீர்த்தி பாண்டியனும் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

actor

அதில் அவர், " பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே. எனக்கு நடந்த மிகப்பெரிய விஷயம் நீ தான். உன் அன்பும், சந்தோஷமும் சிறந்ததாகவே இருக்கிறது. என் மகிழ்ச்சியே, நான் உன்னை நேசிக்கிறேன்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன். இப்பதிவை பார்த்து அசோக் செல்வன் அதிர்ச்சி அடைந்து ஆச்சரியத்தில் திழைத்து வருகிறாராம்.