மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் அவருக்கு ஓனர் கிடையாது. பார்ட்னர் தான்!" கீர்த்தி பாண்டியன் குறித்து அசோக் செல்வன் ஓபன் டாக்!
2013ம் ஆண்டு "சூது கவ்வும்" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தொடர்ந்து பிஸ்ஸா 2, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருவன், 144, ஓ மை கடவுளே, மன்மத லீலை, தங்கும் விடுதி, போர்த்தொழில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சில வலைத்தொடர்களிலும் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்த "கண்ணகி" திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் அசோக் செல்வனிடம் ஒரு நேர்காணலில் , "திருமணத்திற்குப் பிறகும் கீர்த்தி தொடர்ந்து படங்களில் நடிப்பாரா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அஷோக் செல்வன், "நான் கீர்த்தியின் ஓனர் கிடையாது. பார்ட்னர் தான். அவருக்கு என்ன பிடிக்குமோ அதை அவர் செய்தால் தான் எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் தனித்தனி நபர்கள் தான்" என்று கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.