மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"முதல் காதல் எப்போதும் மறக்காது! நடிகைகளுடன் நெருக்கம்! மனைவியின் செயல்!" அசோக் செல்வன் பேட்டி!
2013ம் ஆண்டு "பில்லா 2" படத்தில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தொடர்ந்து "சூது கவ்வும்" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து தற்போது சி. எஸ். கார்த்திகேயன் இயக்கத்தில் "சபாநாயகன்" படத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படி விழாவில் கலந்து கொண்டு பேசினார் அசோக் செல்வன்.
விழாவில் அவர் பேசியதாவது, "இது ஒரு ஜாலியான என்டர்டைன்மெண்ட் படம். இதில் நகைச்சுவையாக நடிப்பதற்காக நான் நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். எனக்கு இவ்வளவு ஹியூமர் உண்டா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். நக்கலைட்ஸ் சேனலை எனக்கு ஏற்கனவே பிடிக்கும்.
மூன்று நாயகிகளுடன் நடித்தது பற்றி என் மனைவி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். எல்லோருக்கும் முதல் காதல் எப்போதுமே மறக்காது. அதைக் கிளறி விடுவதோடு, மன அழுத்தத்திற்கு மருந்தாக "சபாநாயகன்" படம் இருக்கும்" என்று அசோக் செல்வன் கூறினார்.