மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவிக்கு வாழ்த்து கூறிய பதிவிட்ட அசோக் செல்வன்.. வைரலாகும் பதிவு.!
கடந்த செப்டம்பர் 13ம் தேதி திருமணம் செய்துகொண்ட கோலிவுட்டின் இளம் ஜோடிகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன். இவர்கள் இருவரும் அறிமுக இயக்குனர் ஜெய் இயக்கிய "ப்ளூ ஸ்டார்" படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.
இவர்களது திருமணம் சமூக வலைத்தளத்தில் கேலி செய்யப்பட்டு, பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், இன்று வரை ஒருவரை ஒருவர் கொண்டாடி வரும் இந்த ஜோடி, முதல் முறையாக திரைக் களத்தில் மோத இருந்தனர். இருவர் நடித்துள்ள படங்களும் இன்று வெளியாக இருந்தது.
யஸ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள "கண்ணகி" படத்தில் கீர்த்தி, அம்மு அபிராமி, வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், ஸ்கை மூன் எண்டெர்டைன்மெண்ட் தயாரிக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அதேபோல் அசோக் செல்வன் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த "சபாநாயகன்" படம் டிசம்பர் 22ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுளளது. இந்நிலையில் அசோக் செல்வன் "கண்ணகி படம் ஒரு ரத்தினக்கல் போன்றது. இந்தப் படக்குழு நடத்திய போராட்டம் எனக்கு தெரியும். கீர்த்திக்கு ஒரு ஸ்பெஷல் ஹார்ட்டின்" என்று பதிவிட்டுள்ளார்.