திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
40 கதை கேட்டு தூங்கியவருக்கு இப்படி ஒரு சோகம்.. லீக்கான வீடியோ..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொண்டு தமிழ் மக்களிடையே பிரபலமாகி, பின்னர் சன்டிவி பக்கம் சென்றவர் அஸ்வின். இவர் இயக்குனர் ஹரி ஹரன் இயக்கத்தில் நேற்று வெளியான என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் தேஜூ அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ், டெல்லி கணேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த சில மாதத்திற்கு முன்னர் இப்படத்தின் திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற போது பேசிய நடிகர் அஸ்வின்குமார், "நான் படத்திற்கு நடிக்க முடிவெடுத்து 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன். 41-ஆவது, நான் தூங்காத கதையும் இதுதான். இந்த படம் நன்றாக இருக்கும்" என்று பேசினார். இவரது பேட்டி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 40 எழுத்தாளர்களை அவமதித்துவிட்டதாக பல கண்டன குரல்கள் உயர்ந்தது.
மேலும், தனது முதல்படம் வெளியாகும் முன்னரே இவ்வாறு பேசுபவன், வாழ்நாளில் வெற்றியடைந்த பின்னர் என்னவெல்லாம் பேச மாட்டான் என்று காட்டமான கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 13 ஆம் தேதியான நேற்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியான நிலையில், அது தமிழ்ராக்கர்ஸ் இணையத்திலும் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு போட்ட முதலீடு வருமா? என்ற சந்தேகத்தில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்த படத்திற்கு வந்த பலரும், "40 கதை கேட்டு அவர் தூங்கிவிட்டார். அவர் படத்தை பார்க்க வந்து நாங்கள் தூங்கி விட்டோம். அவரின் பேச்சுக்கும் நடிப்புக்கும் ஒன்றுமே இல்லை. நடிக்கவும் தெரியவில்லை, வாய் மட்டும் எவ்வுளவு பேசுகிறார்" என்று நாகூசும் வார்த்தையால் கிட்டாத குறையாக புலம்பி சென்றனர். கோவையை சார்ந்த திரைப்பட பார்வையாளர் சகட்டு மேனிக்கு திட்டியும் சென்றார்.