திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்!
ஐஸ்வர்யா ராய் என்றால் அனைவரும் தெரிந்த ஒரு பிரபலம். உலக அழகியாக இருந்ததோடு ஹிந்தி சினிமாவை கலக்கியவர். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு அவர் குடும்பத்துடன் செட்டிலானார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்கிற 7 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படம் வெளியான நிலையில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்பமாக உள்ளார் எனவும் இரண்டாவது குழந்தையை பச்சன் குடும்பம் எதிர்பார்த்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
ஆனால் அது உண்மையில்லை என ஐஸ்வர்யா ராய் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அது தவறான ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படம், அதனால் இப்படி தகவல் பரவிவிட்டது என விளக்கம் கொடுத்துள்ளனர்.