3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
பிளாட்பாரத்தில் கேட்பாரற்று பிச்சைக்காரனாக கிடந்த நபர்! விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை! கலங்க வைக்கும் பின்னணி!
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக, இயக்குனராகும் ஆசையில் சென்னை வந்த நபர் ஒருவர் சென்னை வடபழனி சாலையோரம் கேட்பாரற்று மோசமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உதவுமாறும் செய்தி பெருமளவில் பகிரப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சில சினிமா துறையை சேர்ந்தவர்கள் சஅங்கு சென்று பார்த்தபோது நபர் ஒருவர் சிக்குப் பிடித்த தலையுடன், அழுக்கேறிய உடலுடன், கிழிந்த உடைகளை அணிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் யாரென விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த நபர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த குருநாதன் என்பதும், நடிகர் குணால் மற்றும் மோனல் நடிப்பில் வெளிவந்த பார்வை ஒன்றே போதுமே படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து படவாய்ப்புகள் தேடி அலைந்துள்ளார். ஆனால் அவருக்கு எவ்வித வாய்ப்புகளும் கிடைக்காத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் உள்ளார்.
பின்னர் உதவ ஆள் இல்லாமல், சாப்பாடு இல்லாத நிலையில் அவர் வடபழனி சாலை ஓரத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் கிடைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு பிளாட்பாரத்தில் ஆங்காங்கு தங்கி வந்துள்ளார். இத்தகைய துயரத்திற்கு மத்தியிலும் அவர் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதை நிறுத்தவில்லை. எங்கிருந்தோ பேப்பர் மற்றும் பேனா வாங்கி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்துள்ளார்.
அதனைக் கண்டு ஆச்சரியமடைந்த சிலர் இது குறித்து அவரிடம் கேட்டநிலையில் அவர் என்னுடைய கதைகள் திருடப்பட்டதாக தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது நண்பரான வேல்முருகனை தொடர்பு கொண்ட நிலையில் அவர் வந்து குருநாதனை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார்